Wednesday, December 30, 2009

??



மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா?
தூங்கும் தேவை ஏதுமின்றி
கனவுகளும் கைகளில் விழுமா?

Friday, December 11, 2009

நீ !



ஒரு சொட்டுக் கடலும் நீ,
ஒரு பொட்டு வானம் நீ,
ஒரு புள்ளிப் புயலும் நீ,
பிரம்மித்தேன் !!!
ஒளிவீசும் இரவும் நீ,
உயிர்கேட்கும் அமுதம் நீ,
இமைமூடும் விழியும் நீ,
யாசித்தேன்.............

Tuesday, December 8, 2009

அடுத்த பிறவியில்....



நம்பிக்கை இல்லை
அடுத்த பிறவியில்
உனக்கு.
ஆனால்
நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க.

மனதில் மட்டுமல்ல
உன்னையே முழுதும்
என்னுள் சுமக்க
உன் தாயாக !

காலை விடியலின்
முதல் உருவம் நானென்றாய் !
முதல் உறவாகவே…..
உன் தாயாக !

உன் விழியில் நானென்றாய் !
கண்ணுக்குள் வைத்துன்னை
பாதுகாப்பேன்…..
உன் தாயாக !

கவிதைகளின்
தொடக்கம் நானென்றாய் !
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக !

மடி சேர விரும்பினாய் !
என் மடியிலே சேர்த்துன்னை
தாலாட்டு பாடுவேன்
உன் தாயாக !

உடனிருந்தால் அனைத்தையும்
வெல்வேன் என்றாய் !
கற்றுக்கொடுத்து எல்லாவற்றிலும்
வெற்றி காணவைப்பேன்
உன் தாயாக !

உலகை
பரிசளிப்பேன் என்றாய் !
இந்த உலகையே உனக்கு
அறிமுகப்படுத்துவேன்
உன் தாயாக !

என்னை போலொரு
பெண்குழந்தை வேண்டுமென
ஆசை உனக்கு.
உன்னையே
என் சாயலில்
பெற்றெடுப்பேன்
உன் தாயாக !

நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !

Saturday, December 5, 2009

ஏக்கம் !



எப்போது கிடைக்கும்,
ஒரே நூலாய்..
பைபிள், கீதை, குரான்.

Wednesday, November 25, 2009

பால் நிலவு!

Saturday, November 7, 2009

இனி வேண்டாம்!



நீ யாருக்கோ
செய்த மௌன அஞ்சலியை
பார்த்ததும்....
எனக்கு செத்து விட தோன்றியது... - தபூ சங்கர்

Wednesday, November 4, 2009

மொட்டுகளே....




மொட்டுகளே மொட்டுகளே
மூச்சு விடா மொட்டுகளே,
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்...

உன் அரும்புகள் மலர்கையிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காதே....

Wednesday, October 28, 2009

இது தான் உண்மை..



ஓர் சிவகாசி சிறுவனின்
கல்வி பறிக்க...
தானும் ஓர் காரணம்
என்பதை உணர்ந்து தான்..

ஒவ்வொரு முறையும்,
தீக்குளித்து கொள்கிறதா
தீக்குச்சி??

Friday, October 9, 2009

நீர் பிரச்சனை...



பிறந்த வீட்டுக்கும்
புகுந்த வீட்டுக்கும் பிரச்சனை....
என்ன செய்ய போகிறாள்?
எங்கள் மகள் "காவேரி" :(

Wednesday, October 7, 2009

காதல் சொன்ன கணம்!



(காதலை சொல்லும் போது....

நாம் கொண்ட காதலை,
அவள் கண்களிலும் பார்க்கும்
அந்த அழகான தருணத்தை......

இதை விட அழகாய் சொல்ல முடியுமா?
என்னை கேட்டால் - முடியாது )

எகிறி குதித்தேன்
வானம் இடித்தது..

பாதங்கள் இரண்டும் பறவையானது

விரல்களின் காம்பில்
பூக்கள் முளைத்தது

புருவங்கள் இறங்கி மீசையானது

ஆனந்த கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்
ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன்
ஒரு இலையாய்


காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே !

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல்முழுதும் நிலா உதிக்கிறதே

வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்

ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே

கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்


மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா

கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா

காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே

வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே

தீ...



கையை சுடும்
என்றாலும்...

தீயை தீண்டும்
பிள்ளை போல்

உன்னையே மீண்டும் நினைக்கிறன் !

Saturday, October 3, 2009

அழகு !



"அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்"
என்பது உண்மை என்றால்
என் முகத்தில் தெரிகிறதா?
அவள் முகம்!!!

Wednesday, September 30, 2009

நம் காதல்...



கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும் !!

தர்மம் !



பசுவினை பாம்பென்று
சாட்சி சொல்ல முடியும்...
காம்பினில் விஷம் என்ன
கறக்கவா முடியும் ?

Friday, September 25, 2009

வறுமை...



பாழாய் போன மகள்
ஆளாகி போனதால்
தாயும் இங்கே....
தாவணிக்கு மாறினாள் :(

Thursday, September 24, 2009

நிஜம்...



இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு
விலகி விடும்....

நீ மட்டும் தான்
இந்த உலகத்திலே
உனக்கு துணை
என்று விளங்கிவிடும்.

தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை....

எத்தனை கோடி கண்ணீர்
மண்மீது விழுந்து இருக்கும்
அத்தனை கண்ட பின்பும்
பூமி இன்றும் பூ பூக்கும்....

Monday, September 21, 2009

தசரதன் நான்....



தசரதன் போல்...
ஆயிரம் திருமணம் செய்து கொள்ள
ஆசை எனக்கு.

ஆனால் ஒன்று,
ஆயிரம் மனைவியும்
நீயாக இருக்க வேண்டும்! - தபு சங்கர்

Friday, September 18, 2009

சக்தி இல்லை...


நெஞ்சில் ஈரம் இல்லாதவன்
என்று கூட
உறவுகள் என்னை தூற்றட்டும்.........

கவலை இல்லை.

இழவு வீடுகளுக்கெல்லாம்
நான் வரவேமாட்டேன்

அங்கு கூட,
நீ அழுவதை பார்க்க முடியாது என்னால் ! - வைரமுத்து

வானிலை..



நீ என்பது மழையாக,
நான் என்பது வெயிலாக...
மழையோடு வெயில் சேரும்
அந்த வானிலை சுகம் ஆகும்!

Wednesday, September 16, 2009

பிரசவ அறை....

Tuesday, September 15, 2009

இறக்க முடியாத சிலுவை...

இந்தியா காதலின் பூமி தான்....
காதலர்கள் பூமி அல்ல :(

Monday, September 14, 2009

குழந்தையாய் :)


பெ: நான் சிறு குழந்தை
என்று நினைத்தேன்.
உன் கவிதையினால் வயதறிந்தேன்...

என்னை மறுபடியும்
சிறு பிள்ளையாய் செய்வாயா?

ஆ: கட்டிலிடும் வயதில்...
தொட்டிலிட சொன்னால்
சரியா? சரியா?

பெ: கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால்...
பிழையா? பிழையா?