Wednesday, January 13, 2010

வயதான கடிதம்...

Monday, January 4, 2010

முதல் மரணம்..............



நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆட வைத்தாய்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிலிட்டாய் !!

Saturday, January 2, 2010

கருகும் ரோஜா :(



மெல்லிய புடவையும் ,
உடையும் பூவுமாய்,
இவளை கடக்கும்
போதெலாம்
ஏனோ வீசும்
கருகும் ரோஜா வாசம்...

உதட்டோரச் சாயமாய்
உவர்த்து வழிகிறது
கலியுக ராமர்களுக்கான
காமம் !

பசிக்கு போர்த்தியிருந்த
ஈரத் துணியையும்
அவிழ்த்தெறிந்து
எள்ளி நகைக்கிறது
வாழ்க்கை...

இதோ இங்கே
சில மேல்வயிறுகள்
நிரப்ப தன்
அடிவயிற்றை
அடகு வைக்கிறாள் ...

அம்மணமாய்
கிடக்கும் போதும்
அம் மனம்
நினைப்பது யாவும்
நொண்டிக் கணவனும்,
சவலைக் குழந்தையும்
பற்றித் தான் ...

உடல் தேவையும்,
உள்ளத் தேவையும்
உறவாட..

பொய்யாய் சிரிக்கிறாள்,
பொய்யாய் அணைக்கிறாள்,
பொய்யாய் உச்சமடைகிறாள் ..

எவனோ ஒருவனுக்கு
தற்காலிகமாய்
இரையாகிறாள் ...

தெய்வத்தாலும் ஆகாது
இவள் வாழ்வின்
துயர் துடைக்க,
உண்மையில்
'மெய்' வருத்தி
கூலி பெறுபவள்
இவள் மட்டுமே...

வயிற்றிலிருக்கும்
குழந்தைக்கு அங்கே
தான் காதல்கொண்ட
கதைகள் சொல்லி
மனைவி வளர்க்க ,

அவள்தன் காதலை,
காமமாய்
சுருங்கிய சிறு பையில்
இவள் கட்டிலுக்கடியில் ,
விட்டுச் செல்கிறது
ஒரு மிருகம் ...

முதுகின்
நகக் கீறல்களோ ,
மார்பில் பதிந்த
பற்தடங்களோ ,
இவளை பாதிக்கவில்லை ...

பழைய ரூபாய் நோட்டின்
வாசம் முகர்ந்து சற்றே
கண் மூடுகிறாள் ...

முன்னேற்றி முடி
காற்றிலாட,
ஆழ்ந்து தூங்குகிறது
அக்குழந்தை ....!!



புறம் பேசும்,
இவ்வுலகில்
எவர் பற்றியும்
எனக்கும்
கவலையில்லை ...

கண்டவனின்
பரவசத்திலும்
கண் மூடி ,
கணவனையோ,
காதலனையோ ,
நினைக்கும் ,
எந்தவொரு
விலைமகளும்
கண்ணகி தான் !!!