
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்,
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்.
ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம், தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்...
பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம்
எனை அரவணைத்து
உனதருள் பெற.....
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் !!
0 comments:
Post a Comment